கார்

ரூ. 4.18 கோடி விலையில் அறிமுகமான புதிய லம்போர்கினி கார்

Published On 2023-04-13 12:52 GMT   |   Update On 2023-04-13 12:52 GMT
  • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய உருஸ் S மாடல் உருஸ் பெர்ஃபார்மாண்ட் வேரியண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் லம்போர்கினி உருஸ் S மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் தனது உருஸ் S மாடலை அறிமுகம் செய்தது. புதிய உருஸ் S விலை ரூ. 4 கோடியே 18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உருஸ் S பெயரில் உள்ள S என்ற வார்த்தை இந்த மாடலின் மிட்-லைஃப் அப்டேட்-ஐ குறிக்கிறது. முன்னதாக லம்போர்கினி அவெண்டடார் S மாடல் இதே போன்ற அப்டேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெர்ஃபார்மண்ட் போன்றே உருஸ் S மாடலில் ஸ்டீல் ஸ்ப்ரிங் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

 

புதிய லம்போர்கினி S மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் குவாட் எக்சாஸ்ட் அவுட்லெட்கள், வெண்டெட் பொனெட் மற்றும் கார்பன் ஃபைபர் ரூஃப் உள்ளன. மேலும் டூயல் டோன் இண்டீரியர் தீம், செயற்கைக்கோள் சார்ந்த நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டிஜிட்டல் கார் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி உருஸ் S மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News