கார்

விற்பனையில் 14 லட்சம் யூனிட்கள் - அசத்தும் மஹிந்திரா பொலிரோ!

Published On 2023-04-25 14:41 GMT   |   Update On 2023-04-25 14:41 GMT
  • பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது.
  • வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மாடல் 2023 நிதியாண்டில் மட்டும் விற்பனையில் 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2000-ம் ஆவது ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ மாடல் இதுவரை விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

2021 மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது. இந்தியாவில் விற்பனையான டாப் 30 யுடிலிட்டி வாகனங்கள் பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் மொத்தத்தில் 1 லட்சத்து 577 யூனிட்கள் விற்பனையாகி ஏழாவது இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் இணைந்து மாதம் 8 ஆயிரத்து 381 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.

 

இந்திய சந்தையில் பொலிரோ மாடல் B4, B6, மற்றும் B6 (O) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 9 லட்சத்து 92 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 03 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

"விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதன் மூலம் பொலிரோ மாடல் எஸ்யுவி என்பதை கடந்து, இந்தியாவின் ஊரக மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் மிகவும் பிரபலமான பெயராகவும் மாறி இருக்கிறது. 2023 நிதியாண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் விற்பனை எங்களது வாடிக்கையாளர்களின் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது," என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவு தலைவர் வீஜே நக்ரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News