கார்

முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடல் முன்திவு துவக்கம் - ஆனால் ஒரு டுவிஸ்ட்..

Published On 2024-04-16 15:19 GMT   |   Update On 2024-04-16 15:19 GMT
  • இந்த கார் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
  • 2024 ஸ்விப்ட் மாடல் ஆறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

மாருதி சுசுகி நிறுவனம் நான்காம் தலைமுறை மாருதி ஸ்விப்ட் மாடல் காரை மே மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்பாகவே 2024 ஸ்விப்ட் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலை பயனர்கள் ரூ. 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய ஸ்விப்ட் மாடல்- புளூ, ரெட், வைட், சில்வர், பிளாக் மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கலாம்.

2024 மாருதி ஸ்விப்ட் மாடலின் முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள், புதிய டிசைன், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இந்த கார் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த கார் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்குமா அல்லது பழைய 1.2 லிட்டர் K12C என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

Tags:    

Similar News