தமிழகத்தில் உற்பத்தி ஆலை அமைக்கும் டாடா மோட்டார்ஸ்
- புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.
- புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைகிறது. இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை முதல் முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்.
தற்போது வரை ஜாகுவார் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, அதன் பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து பூனே ஆலையில் வைத்து அசெம்பில் செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ்-இன் ஜாகுவார் லேண்ட் ரோவர் ராணிப்பேட்டையில் அமைய இருக்கும் புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
இதுதவிர ஏராளமான இதர கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.
டாடா மோட்டார்ஸ்-இன் புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைய இருக்கிறது. இதற்காக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்.