ஃபெராரி எலெக்ட்ரிக் கார் - விலையை கேட்டா தலையே சுத்திடும்..
- ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
- புதிய ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் காரின் விலை மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை தோராயமாக ரூ.4.17 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் ஃபெராரியின் Purosangue கார் மாடலின் விலை அமெரிக்காவில் $3,98,350 (ரூ.3.32 கோடி) மற்றும் இந்தியாவில் ரூ.10.5 கோடியில் தொடங்குகிறது.
கோப்புப்படம்
ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் கார் இரண்டு இருக்கைகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு மின்சார மோட்டார் கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு இத்தாலியில் புதிய தொழிற்சாலையை தொடங்கும் ஃபெராரி தனது வாகனங்களின் ஆண்டு உற்பத்தியை 20,000 யூனிட்டுகளாக உயர்த்த உள்ளது. இந்த ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.