கார்

இந்த டாடா கார் வாங்க இரண்டு மாதங்கள் காத்திருக்கனும் - எந்த மாடல்?

Published On 2024-08-21 15:44 GMT   |   Update On 2024-08-21 15:44 GMT
  • டாடா கர்வ் EV இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • டாடா கர்வ் EV மாடலுக்கு காத்திருப்பு காலம் அதிகரிக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் EV மற்றும் கர்வ் கூப் எஸ்யுவி மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்து விற்பனைக்கும் கொண்டுவந்தது. புதிய கர்வ் மாடல்களின் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இது குறித்து வெளியான தகவல்களின் படி புதிய கர்வ் EV மாடல்களை வாங்க கணிசமான வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த காரை வாங்க ஏற்கனவே மூன்ற இலக்க எண்களில் முன்பதிவு கடந்துள்ளதாக தெரிகிறது.

 


தற்போது டாப் என்ட் மாடல்கள் மட்டுமே விற்பனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முதற்கட்ட வினியோகத்தில் டாப் எண்ட் மாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் டாடா கர்வ் EV மாடல் 45 கிலோவாட் ஹவர் மற்றும் 55 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் இரு மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 45 கிலோவாட் ஹவர் மாடலை டெலிவரி பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் எட்டு வார காலம் காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 55 கிலோவாட் ஹவர் வேரியண்ட்-ஐ டெலிவரி எடுக்க ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். 

Tags:    

Similar News