கார்

டாடா பன்ச் CNG வெளியீடு - இணையத்தில் லீக் ஆன புது தகவல்!

Published On 2023-07-24 12:19 GMT   |   Update On 2023-07-24 12:19 GMT
  • டாடா பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
  • டாடா நிறுவன கார்களில், CNG கிட் பெறும் நான்காவது மாடல் இது ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாடா டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்கள் வரிசையில் CNG கிட் பெறும் நான்காவது கார் மாடலாக பன்ச் மாடல் இடம்பெற்று இருக்கிறது.

அல்ட்ரோஸ் CNG மாடலில் உள்ளதை போன்றே புதிய பன்ச் CNG மாடலிலும் டூயல் சிலின்டர் செட்டப் வழங்கப்படுகிறது. இது காரின் பூட் பகுதியை அதிகளவில் ஆக்கிரமிக்காது. புதிய பன்ச் CNG மாடலிலும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

 

இந்த என்ஜின் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. பன்ச் CNG வேரியன்டை நேரடியாக CNG மோடிலும் ஸ்டார்ட் செய்ய முடியும். பல்வேறு CNG கார்களிலும் இந்த வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய காரின் வெளிப்புறம் i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றும் மேற்கொள்ளப்படலில்லை.

புதிய பன்ச் CNG மாடலின் உள்புறம் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 16 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News