இது புதுசு

எல்இடி ஹெட்லேம்ப் கொண்ட 2023 கேடிஎம் டியூக் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2023-06-19 07:22 GMT   |   Update On 2023-06-19 07:22 GMT
  • 2023 கேடிஎம் டியூக் 200 மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
  • புதிய மாடலில் 199.5சிசி லிக்விட் கூல்டு, DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் பலமுறை டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்ட 2023 கேடிஎம் 200 டியூக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடலில் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. 250 டியூக் மற்றும் 390 டியூக் மாடல்களில் உள்ளதை போன்றே 200 டியூக் மாடலிலும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளது.

புதிய அப்டேட் மூலம் இந்த மாடல் விலை ரூ. 3 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது. 2023 கேடிஎம் டியூக் 200 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம், என்று துவங்குகிறது. இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

 

அந்த வகையில், புதிய மாடலும் மெல்லிய மற்றும் கூர்மையான பாடிவொர்க் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ஒட்டுமொத்தமாக ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது. 2023 கேடிஎம் டியூக் 200 மோட்டார்சைக்கிள் எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் டார்க் சில்வர் மெட்டாலிக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

புதிய மாடலில் 199.5சிசி லிக்விட் கூல்டு, DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 2.467 ஹெச்பி பவர், 19.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கிளட்ச் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள், பைபர் கேலிப்பர்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய கேடிஎம் 200 டியூக் மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V, ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் பஜாஜ் பல்சர் NS200 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News