இது புதுசு

மணிக்கு 96.5 கி.மீ.. அதிநவீன தானியங்கி தொழில்நுட்பம்.. அசத்தும் பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ்

Published On 2023-11-14 11:50 GMT   |   Update On 2023-11-14 11:50 GMT
  • இந்த காரில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
  • இந்த தொழில்நுட்பம் ஓட்டுனர்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது 7 சீரிஸ் மாடல்களில் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 2024 ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் 7 சீரிஸ் மாடல்களில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல்கள் அதிகபட்சம் மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்.

7 சீரிஸ் மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. i7 எலெக்ட்ரிக் செடான் மாடல்களிலும் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது இந்த தொழில்நுட்பம் ஓட்டுனர்களுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று தெரிகிறது.

தானியங்கி முறையில் செல்வதோடு, கார் விபத்தில் சிக்குவதை பெருமளவுக்கு தடுக்கவும் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் உதவும். இதற்காக இந்த காரில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அதிக வெளிச்சம் நிறைந்த பகல் நேரங்கள் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மற்றும் i7 எலெக்ட்ரிக் செடான் மாடல்களில் அதிநவீன சென்சார்கள், ரேடார், 3D Lidar மற்றும் அல்ட்ராசோனிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சென்சார்கள் 2024 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களை அனைத்து விதமான வானிலைகளின் போதும் அருகில் உள்ள பொருட்களை துல்லியமாக கண்டறிய உதவும்.

புதிய சென்சார்கள் வழங்கப்படுவதால், பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது 7 சீரிஸ் மற்றும் i7 செடான் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. 

Tags:    

Similar News