இது புதுசு

ரூ. 14.90 லட்சத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த பிஎம்டபிள்யூ

Published On 2024-07-25 07:42 GMT   |   Update On 2024-07-25 07:42 GMT
  • இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கியது.
  • இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வந்தது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கி இருக்கிறது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ தனது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை மட்டும் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும், மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

 



இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல ரைடிங் மோட்கள், 10.25 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 8.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ CE 04 முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டருடன் ஸ்டான்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன்களை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. ஸ்டான்டர்டு சார்ஜர் 4 மணி நேரத்திலும், பாஸ்ட் சார்ஜர் 1 மணி 40 நிமிடங்களிலும் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிடும்.

தற்போதைக்கு இந்த ஸ்கூட்டர் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது இம்பீரியல் புளூ மற்றும் லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News