விலை ரூ. 93.90 லட்சம் தான்.. இந்தியாவில் அறிமுகமானது பிஎம்பிள்யூ X5 பேஸ்லிப்ட்
- புதிய பிஎம்பிள்யூ X5 பேஸ்லிப்ட் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
- பிஎம்பிள்யூ X5 பேஸ்லிப்ட் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
பிஎம்பிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய X5 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்பிள்யூ X5 பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 93 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மேம்பட்ட எஸ்யுவி மாடல் நான்கு வேரியன்ட் மற்றும் ஏராளமான நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பிஎம்பிள்யூ X5 பேஸ்லிப்ட் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் ரேன்ஜ் 40i எக்ஸ் லைன் மற்றும் 40i M ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்களிலும், டீசல் ரேன்ஜ் 30d எக்ஸ் லைன் மற்றும் 30d M ஸ்போர்ட் போன்ற வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ப்ரூக்லின் கிரே, கார்பன் பிளாக், மினரல் வைட், ஸ்கை-ஸ்கிரேப்பர் கிரே, டான்சனைட் புளூ மற்றும் பிளாக் சஃபையர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
X5 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற ஹெட்லேம்ப்களில் ஏரோ வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், ரிவைஸ்டு எல்இடி டெயில் லைட்கள், X வடிவம் கொண்ட பேட்டன்கள், டுவீக் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அம்சங்களை பொருத்தவரை 14.9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், மல்டி-கலர் ஆம்பியன்ட் லைட்டிங், குரூயிஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப், ஆப்ஷனல் ஸ்போர்ட்ஸ் சீட் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.
பிஎம்பிள்யூ X5 பேஸ்லிப்ட் மாடலில் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள 6 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 335 ஹெச்பி பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் டீசல் என்ஜின் 262 ஹெச்பி பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இரண்டு என்ஜின்களுடன் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 12ஹெச்பி மற்றும் 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், எக்ஸ்டிரைவ் AWD ஸ்டான்டர்டு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.