null
சிட்ரோயன் பசால்ட் இந்திய புக்கிங் துவக்கம்
- பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர்.
- குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும்.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கூப் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பசால்ட் என்று அழைக்கப்படுகிறது. சிட்ரோயன் பசால்ட் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடல் வெளியீட்டுக்கு முன் இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 25 ஆயிரம் முன்பணம் செலுத்தி புதிய சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி-யை முன்பதிவு செய்து கொள்ளலாம். சமீபத்தில் இந்த காருக்கான டீசர்கள் வெளியிடப்பட்டன. அதில் புதிய கூப் எஸ்யுவி மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனள், 10.25 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சில்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று புதிய காரில் வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, டைப் சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 109 ஹெச்பி பவர், 215 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் பசால்ட் மாடல் டாடா கர்வ் மாடலுக்கு போட்டியாக அமையும்.