ஒரே க்ளிக்.. 3 வீலர் 2 வீலராக மாறிடும் - மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப்
- வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
- எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்தலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்டார்ப்-அப் பிரான்டு சர்ஜ் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. S32 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாகனம் புதுவித பயன்பாட்டை கொண்டிருக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கரங்களை கொண்ட பயணிகள் அல்லது சரக்கு வாகனம் ஆகும்.
சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோரை குறிவைத்து இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இது போன்ற வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஹீரோ சர்ஜ் S32 மாடலை பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்த செய்கிறது.
கான்செப்ட் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஹீரோ சர்ஜ் S32 மாடலை வாங்கும் போது பயனர்கள் ஒரே கட்டணத்தில் இரண்டு வாகனங்களை பெற முடியும். ஹீரோ சர்ஜ் S32 கொண்டு பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாகவும் பயன்படுத்தலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாக மாற்ற மூன்று நிமிடங்களே ஆகும்.
சர்ஜ் S32 மாடல் தோற்றத்தில் 3 சக்கர எலெக்ட்ரிக் கார்கோ வாகனம் அல்லது ரிக்ஷா போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புற கேபினில் வின்ட்-ஸ்கிரீன், ஹெட்லைட்கள், டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. பட்டனை க்ளிக் செய்யும் போது முன்புற வின்ட்ஷீல்டு பகுதி மேலே உயர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியே வரும்.
3 சக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர் இடையே பேட்டரி மற்றும் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முறையே 10 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. 3 சக்கர வாகனத்தில் 11 கிலோவாட் ஹவர் பேட்டரியும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.5 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனம் 500 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டிருக்கிறது.