11 நிமிட சார்ஜில் 100 கிமீ ரேன்ஜ்.. வேற லெவல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த ஹோன்டா
- ஹோன்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
- இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
ஹோன்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய பி செக்மன்ட் எஸ்யுவி e:Ny1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் என்ற அடிப்படையில், இந்த கார் ஹோன்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய முன்புற-வீல்-டிரைவ் e:Ny1 ஆர்கிடெக்ச்சரான F பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
புதிய ஹோன்டா e:Ny1 மாடலில் பானரோமிக் சன்ரூஃப், ஹீட்டெட் லெதர் ஸ்டீரிங் வீல், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஹேன்ட்ஸ்-ஃபிரீ டெயில்கேட், ஆட்டோ டிம்மிங் மிரர்கள், எட்டு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டூயல் ஜோன் ஏசி, வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஏராளமான யுஎஸ்பி போர்ட்கள், புஷ் ஸ்டார்ட் பட்டன் வழங்கப்படுகிறது.
இதில் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார்கள், 204 ஹெச்பி பவர், 315 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
இத்துடன் 100 கிலோவாட் சார்ஜர் கொண்டு காரை 11 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இத்துடன் கொலிஷன் மிடிகேஷன் பிரேக்கிங், பிலைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன், ரோட் டிபாச்சர் மிடிகேஷன், லேன் கீப் அசிஸ்ட், பார்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் 15.1 இன்ச் அளவில் சென்ட்ரல் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, டிரைவிங் மற்றும் இன்போடெயின்மென்ட் அம்சங்கள், ஆன்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா எலெக்ட்ரிக் காரின் வினியோகம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.