இது புதுசு

"I AM TRULY SORRY".. தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட TOYOTA தலைவர்.. நடந்தது என்ன?

Published On 2024-06-04 04:31 GMT   |   Update On 2024-06-04 04:31 GMT
  • கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது
  • டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

Collison டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகியவை உரிய முறையில் செய்யப்படாமல் அவற்றுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.

 

இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று (ஜூன் 3) செய்தியாளர்களை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் தோன்றிய அவர், இந்த முறைகேடுகளுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் "I AM TRULY SORRY" என்றும் சில வினாடிகள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார். 

Tags:    

Similar News