இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகும் கியா கரென்ஸ் எலெக்ட்ரிக் மாடல்
- கியா EV9 மாடல் விரைவில் இந்தியா வரவிருக்கிறது.
- 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்கிறது.
கியா நிறுவனம் தனது சர்வதேச யுத்தியின் அங்கமாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு புதிய வாகனங்களில் ஒன்று கியா கரென்ஸ் EV மற்றொன்று முற்றிலும் புது எலெக்ட்ரிக் கார் ஆகும். கியா முதலீட்டாளர்கள் தினம் 2024 நிகழ்வில் இது தொடர்பான தகவல்களை அந்நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹோ சுங் சாங் உறுதிப்படுத்தினார்.
இவைதவிர கியா EV9 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கியா நிறுவனம் 2026 ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும். 2024 ஆண்டிலேயே EV3, இதைத் தொடர்ந்து EV2, EV4 மற்றும் EV5 போன்ற மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது."
"வளர்ந்து வரும் சந்தைகளில் இரண்டு மாடல்கள் அப்பகுதிக்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் இந்த வரிசையில் கியா கரென்ஸ் EV மாடல் அறிமுகம் செய்யப்படும்," என்று ஹோ சுங் சாங் தெரிவித்தார்.