மஹிந்திரா பொலிரோ நியோ பிஎஸ்6 2 இந்தியாவில் அறிமுகம்
- மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ புதிய புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டது.
- புதிய வேரியண்ட் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகரித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தைில் தனது வாகனங்களை பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய துவங்கி இருக்கிறது. தற்போது பொலிரோ நியோ மாடலில் மேம்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்டதை அடுத்து புதிய பொலிரோ நியோ மாடலின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய மாடலில் உள்ள என்ஜின் பிஎஸ்6 2 மற்றும் E 20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
லிமிடெட் எடிஷன் தவிர பிஎஸ்6 2 என்ஜின் கொண்ட மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா பொலிரோ நியோ விலை தற்போது ரூ. 9 லட்சத்து 63 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த எஸ்யுவி மாடல் N4, N8, N10 மற்றும் N10 (O) வேரியண்ட்களில் கிடைக்கிறது.
சமீபத்தில் வெளியான தகவல்களின் படி பொலிரோ நியோ மாடலின் வேரியண்ட் விரைவில் மாற்றியமைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த எஸ்யுவி மாடல்- N4 (O), N8 R, N10 (R) மற்றும் N10 (O) (R) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. எனினும், இவை எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது.