125கிமீ ரேன்ஜ் கொண்ட மேட்டார் ஏரா எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்
- மேட்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் 5 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது.
- புதிய மேட்டார் ஏரா மாடலில் மூன்று ரைட் மோட்கள், 10.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் வாகனம்- ஏரா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மேட்டார் ஏரா மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் மேட்டார் ஏரா மாடல்: ஏரா 4000, ஏரா 5000, ஏரா 5000+ மற்றும் ஏரா 6000+ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மேட்டார் EV மாடல் மொத்த டிசைன் இளைமிக்க தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் எல்இடி ஹெட்லைட், க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள், ஸ்ப்லிட் சீட் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ICE இருசக்கர வாகனம் போன்றே காட்சியளிக்கிறது.
மேட்டார் ஏரா 5000 மாடலில் 10 கிலோவாட் மோட்டார் மற்றும் லிக்விட் கூல்டு 5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 125 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது இரண்டு மணி நேரத்தில் சார்ஜ் செய்திட முடியும். இதன் மோட்டார் செட்டப் உடன் 4-ஸ்பீடு மேனுவல் ஷிஃப்ட் லீவர் உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை மேட்டார் எலெக்ட்ரிக் பைக் ரேன்ஜ், ஸ்பீடு, ட்ரிப் மீட்டர், ஒடோமீட்டர், பேட்டரி லெவல், ரைடு மோட்கள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி விவரங்களை வழங்கும் டிஎஃப்டி ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் கன்சோலில் நேவிகேஷன், கால்/மெசேஜ் அலர்ட்கள், ரைடிங் விவரங்கள் உள்ளன. இத்துடன் OTA, கீலெஸ் வசதி மற்றும் சிறிய ஸ்டோரேஜ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹார்டுவேரை பொருத்தவரை இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங் ஹார்டுவேரை பொருத்தவரை ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் ABS/CBS வசதிகை கொண்டுள்ளது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேட்டார் ஏரா 5000 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 999 என்றும், ஏரா 5000+ விலை ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இவை அறிமுக விலை என்பதால் விரைவில் மாற்றப்படலாம். புதிய மாடல்களுக்கு முன்பதிவு ஒரு மாதத்தில் துவங்குகிறது.