விலை ரூ. 2.8 கோடி தான்.. புது ரேன்ஜ் ரோவர் கார் அறிமுகம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.
- இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலின் விலை ரூ. 2 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்.யு.வி.-யின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள 4.4 லிட்டர் வி8 என்ஜின் 626 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 290 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.
சக்திவாய்ந்த என்ஜின் மட்டுமின்றி, இந்த எஸ்.யு.வி. மாடலின் லோயர் பாடி ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்பன் ஃபைபர் டிப் கொண்ட குவாட் டெயில்பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கேபின் பகுதியில் SV சார்ந்த பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட் சீட்கள், கார்பன் ஃபைபர் பேக் உள்ளது.
இதில் உள்ள பேக்ரெஸ்ட் மற்றும் கியர் லீவர்களில் இலுமினேட் செய்யப்பட்ட SV லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரேன்ஜ் ரோவர் SV மாடல் லம்போர்கினி உருஸ், ஆடி RSQ8 மற்றும் ஆஸ்டன் மார்டின் DBX போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.