இது புதுசு

அசத்தலாக வெளியான டீசர்.. ஆகஸ்ட் 1-இல் அறிமுகமாகும் மேம்பட்ட ஸ்கோடா ஸ்கேலா!

Published On 2023-07-21 07:03 GMT   |   Update On 2023-07-21 07:03 GMT
  • ஸ்கோடா ஸ்கேலா மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
  • ஸ்கோடா ஸ்கேலா மாடலில் புதிய கிரில், ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கேலா மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அசத்தலான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஸ்கோடா ஸ்கேலா மாடல் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய மாடல் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியான காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய ஸ்கோடா ஸ்கேலா மாடலில் புதிய கிரில், ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப் கிரில் வரை நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பம்ப்பர் டிசைன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 

புதிய ஸ்கோடா ஸ்கேலா மாடலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின், 1.5 லிட்டர் TSI நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 1 அறிமுகத்தை தொடர்ந்து மேம்பட்ட ஸ்கோடா ஸ்கேலா மற்றும் கமிக் மாடல்கள் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கேலா மாடலின் இந்திய வெளியீடு சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.

Tags:    

Similar News