புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் டெஸ்டிங் துவக்கம்
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
- புதிய டஸ்டர் மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. 2013 வாக்கில் முதல் தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்திய சந்தையில் இதன் இரண்டாவது தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. அந்த வகையில், மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் 2025 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஸ்பை படங்களின் படி மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் தோற்றத்தில் டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட் எஸ்யுவி போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இதில் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், சதுரங்க வடிவிலான ஃபிளாட் பொனெட் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
பக்கவாட்டு பகுதிகளில் டஸ்டர் மாடலில் புல்-டைப் டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கிறது. இதன் ரியர் டோன் ஹேண்டில்கள் சி பில்லரில் இண்டகிரேட் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடலில் தொடர்ந்து சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்களே வழங்கப்பட்டு இருக்கின்றன.பின்புறம் பூமராங் வடிவம் கொண்ட டெயில் லேம்ப், டுவின் பாட் ஸ்பாயிலர் உள்ளது.
புதிய ரெனால்ட் டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் அதிகளவு உள்நாட்டிற்கு ஏற்ற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த கார் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் ஐந்து இருக்கைகள் வழங்கப்பட உள்ளன. இதே காரின் 7 சீட்டர் வெர்ஷனும் உருவாக்கப்படுகின்றன.
Photo Courtesy: cochespias