இது புதுசு

ட்வின் டர்போசார்ஜ்டு என்ஜின் கொண்ட போர்ஷேவின் புது ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

Published On 2022-10-21 09:56 GMT   |   Update On 2022-10-21 09:56 GMT
  • போர்ஷே நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் 7 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே புதிய 911 கரெரா டி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போர்ஷே 911 கரெரா டி மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 380 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியர் வீல் டிரைவ் கொண்ட போர்ஷே 911 கரெரா டி மாடலில் போர்ஷேவின் டார்க் வெக்டாரிங் சிஸ்டம் மற்றும் மெக்கானிக்கல் லாக்கிங் ரியர் டிப்ரென்ஷியல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் காரின் கார்னெரிங் திறன் சிறப்பானதாக இருக்கும். புதிய கரெரா டி மாடல் முந்தைய கரெரா ஸ்டாண்டு எடிஷனை விட 35 கிலோ வரை எடை குறைவு ஆகும். இத்துடன் கரெரா டி மாடலுக்கென 20 மற்றும் 21 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய போர்ஷே கரெரா டி மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 291 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய கரெரா டி மாடலில் போர்ஷேவின் ஸ்போர்ட்ஸ் எக்சாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த காருடன் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

இண்டீரியரை பொருத்தவரை புதிய கரெரா டி மாடலில் ஜிடி ஸ்போர்ட்ஸ் ஸ்டீரிங் வீல், ஆப்ஷனல் காண்டிராஸ்ட் நிற சீட் பெல்ட்கள், ஸ்டிட்ச், ஹெட்ரெஸ்ட் லோகோ மற்றும் ஃபுளோர் மேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இருக்கைகளை எலெக்ட்ரிக் முறையில் 18 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய போர்ஷே கரெரா டி மாடல்- பிளாக், வைட், கார்ட்ஸ் ரெட் மற்றும் ரேசிங் எல்லோ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

இத்துடன் டீப் பிளாக், ஜெண்டியன் புளூ, ஐஸ் கிரே மற்றும் ஜிடி சில்வர் என நான்கு வித மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ்களில் கிடைக்கிறது. மேலும் சால்க், ரூபி ஸ்டார் நியோ, கார்மைன் ரெட், ஷார்க் புளூ மற்றும் பைத்தான் கிரீன் போன்ற சிறப்பு நிறங்களிலும் கிடைக்கிறது.

Tags:    

Similar News