விரைவில் அறிமுகமாகும் ரெனால்ட் இ-ஸ்பேஸ் - புதிய டீசர் வெளியீடு
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய இ-ஸ்பேஸ் மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை லே-அவுட்களில் கிடைக்கும்.
- சர்வதேச சந்தையில் புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாக இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலின் முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஆறாவது தலைமுறை மாடலாக உருவாகி வரும் ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
புதிய இ-ஸ்பேஸ் மாடல் எம்பிவி பாடி ஸ்டைல் கொண்டிருக்கிறது. அளவில் இந்த கார் 4.72 மீட்டர் நீளம், உள்புறம் 2.48 மீட்டர் நீளமாக உள்ளது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இ-ஸ்பேஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் சி வடிவ டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர இந்த எஸ்யுவி மாடல் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், ஃபிளாட் ரூஃப்லைன், ஷார்க் ஃபின் ஆண்டெனா கொண்டிருக்கிறது.
ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் மைல்டு அல்லது ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த எஸ்யுவி மாடல் 1.2 லிட்டர் அல்லது 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவை முறையே 140 ஹெச்பி பவர், 200 ஹெச்பி என வெவ்வேறு செயல்திறன் வெளிப்படுத்தும் என தெரிகிறது.