620 கிமீ ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகம்
- புதிய ஸ்கைவொர்த் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 620கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
- இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-இன் உள்புறம் டச் சென்சிடிவ் எல்சிடி ஸ்கிரீன் உள்ளது.
ஸ்கைவொர்த் EV6 II எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கைவொர்த் எலெக்ட்ரிக் வாகனம் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் ன்று CLTC சான்று பெற்று இருக்கிறது. சீன சந்தையில் புதிய EV6 II மாடலின் விலை 1 லட்சத்து 56 ஆயிரத்து 800 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரத்து 392 என்று துவங்குகிறது.
ஸ்கைவொர்த் EV6 II மாடல் ஏர், பிளஸ், மேக்ஸ் மற்றும் பெரிசிடன்ட் எடிஷன் என நான்கு வித எடிஷன்களில் கிடைக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை புதிய EV6 II மாடல் 4720mm நீளம், 1908mm அகலம், 1696mm உயரம், 2800mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் அலுமினியம் அலாய் வீல்கள், சிங்கில் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-இன் உள்புறம் டச் சென்சிடிவ் எல்சிடி ஸ்கிரீன், 12.3 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இத்துடன் மல்டிமீடியா, நேவிகேஷன் மற்றும் மொபைல் கம்யுனிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் சன்ரூஃப், ஏசி, ரியல் டைம் ஜிபிஎஸ், சியோமியின் விர்ச்சுவல் இன்டெலிஜன்ட் ரோபோட் வழங்ப்பட்டுள்ளது.
புதிய ஸ்கைவொர்த் EV6 II மாடலில் 150 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் AIR மாடலில் 71.98 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்குகிறது. மற்ற மாடல்களில் 85.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.