இது புதுசு

இது மார்வல் Fans-க்கானது.. ரைடர் 125 ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்..!

Published On 2023-08-11 15:00 GMT   |   Update On 2023-08-11 15:00 GMT
  • புதிய பைக் பிளாக் பேந்தர் மற்றும் ஐயன் மேன் என இருவித பெயின்ட் தீம்களில் கிடைக்கிறது.
  • டி.வி.எஸ். ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலிலும் 124.8சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் உள்ளது.

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது 125சிசி கம்யுட்டர் மாடலான ரைடர் 125 மாடலின் புது வேரியன்டை அறிமுகம் செய்தது. இந்த வேரியன்ட் சூப்பர் ஸ்குவாட் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த பைக் மார்வல் சீரிசை தழுவி: பிளாக் பேந்தர் மற்றும் ஐயன் மேன் என இருவித பெயின்ட் தீம்களில் கிடைக்கிறது. அந்த வகையில் ஒரு மாடல் ரெட், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களிலும், மற்றொரு மாடல் பர்பில் மற்றும் பிளாக் நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டு உள்ளது.

இவைதவிர புதிய மாடலில் டிசைன், அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய மாடலிலும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் யூனிட் வழங்கப்படுகிறது.

 

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்.இ.டி. இலுமினேஷன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட்-இல் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃபியூவல் லெவல், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

புதிய டி.வி.எஸ். ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலிலும் 124.8சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.2 ஹெச்.பி. பவர் மற்றும் 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

டி.வி.எஸ். ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 919, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர ரைடர் 125 மாடல் SX,ஸ்ப்லிட் சீட் மற்றும் சிங்கில் சீட் என மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

Tags:    

Similar News