சினிமா

நடிகரை நிஜ அம்பேத்கராக நினைத்த பொதுமக்கள்

Published On 2018-07-09 12:28 GMT   |   Update On 2018-07-09 12:28 GMT
ஆய்வுக்கூடம் படத்தில் நாயகனாக நடித்தவர் தற்போது புதிய படத்தில் அம்பேத்கர் வேடத்தில் நடிப்பதை, பொதுமக்கள் பலரும் நிஜ அம்பேத்கராக நினைத்து விட்டார்கள்.
‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ராஜகணபதி. இவர் தற்போது ‘பீம்’ என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ளார். அப்படத்தில் நடிக்க எடுக்கப்பட்ட புகைப்படம் அசல் அம்பேத்கரை உரித்து வைத்தது போல் இருக்கவே அதை அரசியல்வாதிகள் தங்கள் பேனர் மற்றும் கட்வுட்களில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

சென்னை வள்ளலார் நகர், கொருக்குபேட்டை, வண்ணாரப்பேட்டை மற்றும் மகாராணி திரையரங்கம் எதிரே என முக்கிய பகுதிகளில் இந்த பேனர்களை காணலாம். மேலும் கரூர், சேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் இந்த பேனர்கள் மக்கள் கண்களில் தென்படுகின்றன.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவருடைய போட்டோ பிரபலம் ஆகியுள்ளது. அம்பேத்கர் சம்பத்தப்பட்ட இசை ஆல்பங்களிலும் அவருடைய படங்கள் தென்படுகின்றன. மேலும் அவருடைய போட்டோக்கள் உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் டெல்லியிலும் பரபரப்பாக ஒட்டப்பட்டு வருகின்றன. இவர் நடிகர் ராஜகணபதி என்று தெரியாமலேயே இந்த போட்டோ தான் அம்பேத்கார் என விரும்பி அரசியல்வாதிகளால், மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. 



நடிகர் ராஜகணபதி இதை தனக்கு தன் வாழ்நாளில் கிடைத்தற்கறிய வரப்பிரசாதமாக எண்ணி பெருமை கொள்கிறார். நடிகர் ராஜகணபதியை தெரிந்த சில அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பீம் படத்தை பற்றி நடிகர் ராஜகணபதி கூறும்போது, ‘சட்ட மேதை அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தலைவர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைவராக விளங்கியவர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார்.
Tags:    

Similar News