இந்தியா

ஜானி மாஸ்டர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை.. கட்சியில் இருந்து நீக்கிய ஜன சேனா

Published On 2024-09-16 12:39 GMT   |   Update On 2024-09-16 12:39 GMT
  • நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
  • ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.

புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்ததோடு, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி ஒதுங்கி இருக்க வேண்டும். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News