இனிமே டாக்டர் எஸ்.ஜே சூர்யா டா ... கவுரவித்த வேல்ஸ் பல்கலைக்கழகம்
- எஸ் ஜே சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார்.
- ஷங்கர் தற்பொழுது இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார். இவர் தற்பொழுது வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். கடந்த மாதம் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் தயால் என்ற சைக்கோ காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.
ஷங்கர் தற்பொழுது இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழகத்தில் இன்று நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர். இப்பட்டத்தினை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பட்டத்தை வழங்கினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.