சினிமா செய்திகள்

உடற்பயிற்சியால் ஏற்பட்ட விபரீதம்.. படுத்த படுக்கையில் ரகுல் ப்ரீத் சிங்

Published On 2024-12-01 15:10 GMT   |   Update On 2024-12-01 15:10 GMT
  • தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.
  • இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அஜய் தேவ்கன் நடிக்கும் தி தி ப்யார் தி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சம்பவத்தை பற்றி பதிவிட்டு இருந்தார் அதில் அவர் " நான் உடற்பயிற்சி செய்யும் பொழுது ஜிம்மில் 80 கிலோ எடையை வைத்து டெட் லிஃப்ட் செய்தேன். அதை தூக்கும் பொழுது எனது கீழ் முதுகு தண்டில் சிரிய வலி ஏற்ப்பட்டது ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலும் அதை தூக்கினேன் அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. உடற்பயிற்சி முடித்த பிறகு நேராக ஷூட்டிங்கிற்கு சென்றேன். அன்று மாலை எனக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது என்னால் குணிந்து என் உடையைக்கூட அணிய முடியவில்லை. தசை பிடிப்பு தானே சரியாகிவிடும் என இருந்தேன். ஆனால் அக்டோபர் 10 ஆம் தேதி என் பிறந்தநாள் பார்ட்டிக்கு ரெடியாகி கொண்டிருக்கும் பொழுது திடீர் என் இடுப்பின் கீழ் உள்ள பகுதி என்னை விட்டு பிரிந்தது போல ஒரு உணர்வு. நான் மயங்கினேன். 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். நான் இன்னும் பூர்ண குணமடையவில்லை. நாட்கள் கடக்க கடக்க அது சரியாகிவிடும்" என பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News