இந்தியா
நடிகை சோபிதா சிவன்னா மர்ம மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி
- சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட நடிகை சோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 30. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சோபிதா சிவன்னா மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோபிதா சிவன்னா மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.