இந்தியா
சாலையில் சிந்திய ஆயில்.. சறுக்கி விழுந்த 2 சக்கர வாகன ஓட்டிகள் - அதிர்ச்சி வீடியோ
- எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது.
- இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள குசைகுடா-நகரம் சாலையில் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாலையில் சென்ற எண்ணெய் லாரில் இருந்த எரிபொருள் சாலையில் சிந்தியுள்ளது. இந்த எரிபொருளால் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த சாலையில் மரத்தூள் மற்றும் மணலைத் தெளித்து போக்குவரத்து போலீசார் சாலையை சீர்செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குசைகுடா-நகரம் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டது.