சினிமா செய்திகள்

லப்பர் பந்து படம் சமூக நீதி, சமத்துவ சிந்தனையோடு உள்ளது - திருமாவளவன் பாராட்டு

Published On 2024-10-08 14:47 GMT   |   Update On 2024-10-08 14:47 GMT
  • கிராமங்களில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் கிரிக்கெட்டில் சாதி அரசியல் இருக்கிறது.
  • வீரர்களைத் தேர்வு செய்வதில் சாதி, மதம் ஆகியவை இன்றும் பங்கு வகிக்கின்றன.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.

இத்திரைப்படத்தை இன்று விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் கண்டுகளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "கிராமபுற கிரிக்கெட்டில் சாதி முக்கிய கூறாக இருப்பதனை இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதெல்லாம் கசப்பான வெளிச்சத்திற்கு வராத உண்மைகள். கிராமம் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இது போன்ற பாகுபாடுகள் கொண்டு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இப்படம் ஆணாதிக்க போக்கையும் வெளிப்படுத்தி உள்ளது. படத்தில் ஆணாதிக்கத்தை நொறுக்கும் வசனம் உள்ளது. சாதி திமிர் கூடாது என்பதனை போல ஆணாதிக்க திமிரும் கூடாது என்பதனை காட்டியுள்ளார்.

காதல் என்பது ஒரு குற்றமில்லை. சாதி, மதம் கடந்து காதல் செய்வதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற விழிப்புணர்வை பெண்கள் பெற்று வருகிறார்கள் என்பதை லப்பர் பந்துவில் வரும் பெண் கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. இது பாராட்டுக்குரிய ஒன்று.

சமூக நீதி, சமத்துவ சிந்தனையோடு இப்படம் அமைத்துள்ளது. இது வணிக நோக்கில் எடுத்த படமல்ல. இந்த தலைமுறையினருக்கு சொல்லப்பட வேண்டிய அரசியல் பாடம்" என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News