சினிமா செய்திகள்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

null

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கையா? அமைச்சர் விளக்கம்

Published On 2022-10-10 08:45 GMT   |   Update On 2022-10-10 10:28 GMT
  • நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.
  • இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

 

இந்நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

 

அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.


அமைச்சர் மா.சுப்பிரமணியன்


 


இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News