சினிமா செய்திகள்

கங்குவா வட இந்தியா வெளியீட்டிற்கு மட்டும் 22 கோடி ரூபாய் செலவளித்துள்ளோம் - ஞானவேல்ராஜா

Published On 2024-10-15 16:35 GMT   |   Update On 2024-10-15 16:35 GMT
  • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
  • திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தை வட இந்தியாவில் ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் 15 கோடி ரூபாய் செலவளித்துள்ளதாகவும். வட இந்தியாவில் படத்தை திரையிட 7 கோடி ரூபாயும், மொத்தம் 22 கோடி ரூபாய் வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காக செலவு செய்துள்ளோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News