மத்வால் திறமையான பந்து வீச்சாளர்- மும்பை கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்
- கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- மத்வால் போன்ற இளைஞர்கள் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி லக்னோவை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. இதனால் லக்னோவுக்கு 183 ரன் இலக்காக இருந்தது.
கேமரூன் கிரீன் 23 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 20 பந்தில் 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நேகல் வதேரா 12 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டும், மோஷிகான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.3 ஓவர்களில் 101 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 27 பந்தில் 40 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். ஆகாஷ் மத்வால் 5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். கிறிஸ் ஜோர்டான், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
5 Wickets of #AkashMadhwal ✨against #LSGvMI match......
— Akanksha 45? (@ImAks_86) May 25, 2023
New Bumrah of MI #YorkerKing
Really he is outstanding ?,M to is bnde ki fan? ho chuki hu what a guy what a performance ??@MIPaltanFamily #MumbaiIndians pic.twitter.com/IcV9LyqHfQ
இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
ஆகாஷ் மத்வால் கடந்த ஆண்டு மும்பை அணியுடன் துணை பந்துவீச்சாளராக இணைந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் சென்றதால் அவரை பயன்படுத்திக் கொண்டோம். அவர் திறமையான பந்துவீச்சாளர் என்று எனக்கு தெரியும். தனது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்த்து இருக்கிறோம். மத்வால் போன்ற இளைஞர்கள் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
எங்களது பீல்டிங் செயல்பாடு மகிழ்ச்சியை அளித்தது.ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.