கிரிக்கெட் (Cricket)

3-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

Published On 2024-02-13 11:43 GMT   |   Update On 2024-02-13 11:43 GMT
  • முதல் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது.
  • ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பெர்த்:

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ருதர்ஃபோர்ட் - ரசல் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரசல் 29 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரூதர்போர்ட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ஷ் - வார்னர் களமிறங்கினர். மார்ஷ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் ஹார்டி 16, ஜோஸ் இங்கிலிஸ் 1, மேக்ஸ்வெல் 12 என வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய வார்னர் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து டிம் டேவிட் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெற்றிக்காக போராடிய டிம் டேவிட் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. 

Tags:    

Similar News