தீபக் சாஹர், கிருஷ்ணா அசத்தல்... ஜிம்பாப்வேயை 189 ரன்னில் சுருட்டியது இந்தியா
- வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
- 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
ஹராரே:
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஜிம்பாப்வே அணி சற்று நிதானமாக ஆடியது. கேப்டன் ரெஜிஸ் 35 ரன்களும், பிராட் ஈவன்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் ஜிம்பாப்வே, 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
6 மாதத்திற்கு பிறகு பார்முக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.