கிரிக்கெட் (Cricket)

ஒவ்வொரு பந்திலும் அவரை வீழ்த்திவிடலாம் என்றே தோன்றும், ஆனால்... கோலியை புகழ்ந்த ஆண்டர்சன்

Published On 2024-07-13 07:08 GMT   |   Update On 2024-07-13 07:08 GMT
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்பு பேசிய ஆண்டர்சன், விராட் கோலியை புகழ்ந்தார்.

"ஆரம்ப காலத்தில் விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பந்திலும் அவரை வீழ்த்திவிடலாம் என்றே தோன்றும். ஆனால், இப்போது அப்படியெல்லாம் அவரை வீழ்த்த முடியாது. அவருக்கு எதிராக விளையாடும்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும்" என்று ஆண்டர்சன் தெரிவித்தார்.

ஆண்டர்சனுக்கு எதிராக கோலி 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் 7 முறை கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News