null
மீண்டும் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும்- ஹர்பஜன் சிங்
- விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார்.
- பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அதிக ரன்கள் குவித்தும் குறைந்த ஓவரில் மும்பை அணி வெற்றிபெற்றது ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் டு பிளேசிஸ் தலைமையில் பெங்களூரு அணி கொஞ்சம் கூட போராடாமல் தோல்விகளை சந்தித்து வருவதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள் என்று சொல்வேன். அதை செய்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய அணியில் வெற்றிக்கான போராட்டம் இருக்கும்.
விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார். பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும். அவரால் சில வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் ஒரு வீரர் வெளியே அமர்ந்திருக்கிறார். அதாவது டு பிளேஸிஸ் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருக்கிறார்.
எனவே விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய தலைமையில் இந்த அணி போராடி பின்னர் வெல்லும்.
என்று ஹர்பஜன் சிங் கூறினார்.