கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக வெற்றி: இலங்கை சாதனையை முறியடித்த இந்தியா

Published On 2024-06-25 08:47 GMT   |   Update On 2024-06-25 08:47 GMT
  • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
  • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

செயின்ட் லூசியா:

செயின்ட் லூசியாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து 92 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் 31 ரன், ஷிவம் துபே 28 ரன், பாண்ட்யா 27 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 50 போட்டிகளில் 34-ல் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.

Tags:    

Similar News