null
ஆர்சிபி அணியின் தோல்வியை கொண்டாடிய மும்பை வீரர்கள்- வைரல் வீடியோ
- மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலை இருந்தது.
- குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. நேற்றைய கடைசி லீக் போட்டியில் 2 போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தது. ஆனால் ரன்ரேட் குறைவாக இருந்தது. இதனால் இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் காத்திருந்தது.
இதனையடுத்து இரவு நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் - பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதத்தால் 197 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியை டிவியில் பார்த்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, மும்பை அணிக்காக கிரீன் மற்றும் சுப்மன் கில் சிறப்பாக ஆடினர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.