கிரிக்கெட் (Cricket)

அரசியலில் இருந்து விலகியது குறித்து அம்பதி ராயுடு விளக்கம்

Published On 2024-01-08 07:45 GMT   |   Update On 2024-01-08 07:45 GMT
  • அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்.
  • தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

திருப்பதி:

கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார்.

இதனையடுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது. குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டதாக கூறப்படுகிறது.

அந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது.

இந்த நிலையில் துபாயில் நடைபெற உள்ள ஐ.எல்.டி. 20 போட்டியில் பங்கேற்பதற்காக தான் அரசியலில் இருந்து விலகியதாக அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன். மேலும் தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News