null
பேட்ஸ்மேனாக அரிய சாதனைப் படைத்த நாதன் லயன்
- 2-வது இன்னிங்சில் நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 41 ரன்கள் சேர்த்தார்.
- இதுவரை 1500 ரன்களுக்கு மேல் அடித்தும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்கடனில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 6 பவுண்டரியுடன் 46 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்.
நாதன் லயன் இதுவரை 128 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 162 இன்னிங்சில் 1501 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 12.72 ஆகும். ஆனால் ஒரு அரைசதம் கூட இதுவரை அடித்ததில்லை.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனை படைத்துள்ளார். அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1174 ரன்கள் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளார். இவரும் அரைசதம் அடித்தது கிடையாது. 41 அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 87 டெஸ்ட் போட்டிகளில் 1010 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்துள்ளார்.
வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நாதன் லயன் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.