வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நிக்கோலஸ் பூரன்
- டி20 உலகக் கோப்பையில் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம்.
- தோல்வி குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அரையிறுதிக்கு முந்தைய குரூப் 12 சுற்றுக்கு தரவரிசை அடிப்படையில் 8 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வர வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதி பெறாததால், தகுதிச் சுற்றில் விளையாடியது. ஆனால் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது மிகப்பெரிய அவமானமாக கருதப்படுகிறது.
தோல்வி குறித்து ஆராய பிரையன் லாரா உள்பட 3 பேர் கொண்டு குழுவியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அமைத்துள்ளது. இந்த நிலையில் டி20 அணி கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எனது முடிவுக்கு இதுதான் காரணம் என பூரன் தெரிவித்துள்ளார்.
தொடக்க சுற்றில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்திருந்தனர். ஒரேயொரு வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
பொல்லார்டு ஓய்வையடுத்து மே மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.