கிரிக்கெட் (Cricket)

பாபர் ஆசம்

4-வது போட்டியிலும் நியூசிலாந்து தோல்வி: பாபர் ஆசம் சதத்தால் பாகிஸ்தான் வெற்றி

Published On 2023-05-06 07:29 GMT   |   Update On 2023-05-06 07:29 GMT
  • முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது.
  • அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் பாபர் ஆசம்.

கராச்சி:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

5 ஒரு நாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 3 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் தனது 18-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 10 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்தார். மேலும் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

அகா சல்மான் 46 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷான் மசூத் 44 ரன்னும் எடுத்தனர். மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 43.2 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி 4-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது. அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் அதிகபட்சமாக 60 ரன்னும், மார்க் சேப்மேன் 46 ரன்னும் எடுத்தனர். உஸ்மான் மிர் 4 விக்கெட்டும், முகமது ஹசிப் 3 விக்கெட்டும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கராச்சியில் நாளை நடக்கிறது.

Tags:    

Similar News