கிரிக்கெட் (Cricket)

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண சென்ற பாகிஸ்தான் யூடியூபர் சுட்டுக் கொலை- ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2024-06-11 15:21 GMT   |   Update On 2024-06-11 15:21 GMT
  • பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் ஷாத் அகமது வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார்.

திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் ஷாக் அகமதுவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த நண்பர்கள் அகமதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News