கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மிட்செல் ஸ்டார்க் சூசகம்

Published On 2024-05-27 13:01 GMT   |   Update On 2024-05-27 13:01 GMT
  • ஆஸ்திரேலிய அணிக்காக பிரான்சிஸ் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.
  • டி20 உலகக் கோப்பை தொடர் வருவதால், இந்த முறை முழுமையாக விளையாட முடிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். தனது துல்லியமான யார்க்கர் மற்றும் ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். பிரான்சிஸ் உரிமையாளர்கள் (ஐபிஎல் அணி உரிமையாளர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இவரை ஏலத்தில் எடுக்க தயாராக இருந்தனர். இருந்தபோதிலும் நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம் எனக் கூறி ஐபிஎல் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.

இவர் 2014 மற்றும் 2015-ல் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதையொட்டி ஐபிஎல் தொடரில் முழுவதுமான இடம் பெறுவேன் என அறிவித்தார். இதனால் கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டார்க்கை ஏலம் எடுத்தது. அப்போது இவருக்கு இவ்வளவு தொகையா? என விமர்சனம் எழுந்தது.

விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமான குவாலிபைய-1 மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதனால் அடுத்த வருடமும் விளைாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பும்போது பிரான்சிஸ் போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால் அதற்காக ஒருநாள் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

கடந்த 9 ஆண்டுகளாக நான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தேன். இதற்காக என்னுடைய உடலுக்கு ஓய்வு கொடுக்கவும், மனைவியுடன் நேரத்தை செலழிக்கவும் எனக்கு நானே வாய்ப்பு கொடுத்துக் கொண்டேன். இதனால் கடந்த 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் மட்டுமே கவனத்தில் இருந்தது. பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்த்து வந்தேன்.

நான் தற்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தை விட முடிவு கட்டத்தில் உள்ளேன். ஒரு விடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம். அடுத்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நீண்ட காலம் உள்ளது. இது எனக்கு தொடர்கிறதோ... இல்லையோ... இது அன்னும் அதிகப்படியான பிரான்சிஸ் கிரக்கெட்டிற்கு வழி வகுக்கும்.

அடுத்த வருடம் சரியான போட்டி அட்டவணை எனக்குத் தெரியாது. இருந்த போதிலும் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்த வருடமும் கொல்கத்தா அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News