கிரிக்கெட்

அதிக முறை ஆட்டநாயகன் விருது - விராட் கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

Published On 2024-07-28 06:13 GMT   |   Update On 2024-07-28 06:13 GMT
  • விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • கோலி 125 போட்டிகளில் விளையாடி மைல்கல்லை கடந்தார்.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். முழு நேர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தனது பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 ரன்களில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களை விளாசி இருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, போட்டியின் ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வென்றதன் மூலம் சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மறுபக்கம் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை கடந்தார்.

விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டி முடிந்ததும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:

சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

விராட் கோலி 126 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

சிக்கந்தர் ராசா 91 போட்டிகளில் 15 முறை (ஜிம்பாப்வே)

முகமது நபி 129 போட்டிகளில் 14 முறை (ஆப்கானிஸ்தான்)

ரோகித் சர்மா 159 போட்டிகளில் 14 முறை (இந்தியா)

Tags:    

Similar News