கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக்கோப்பை: 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்

Published On 2024-06-23 03:55 GMT   |   Update On 2024-06-23 04:03 GMT
  • டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் பேட் கம்மின்ஸ்.
  • டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

அப்போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

அப்போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், கரீம் ஜனத் மற்றும் குல்பாதின் நைப் ஆகியோரை கம்மின்ஸ் வெளியேற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன்மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்

ஆப்கானிஸ்தான் அணி வீரர் நங்கெயாலியா கொடுத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் தவறிவிட்டார். இதனால் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை நூலிழையில் பேட் கம்மின்ஸ் இழந்தார்.

டி20 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்

1. லசித் மலிங்கா (SL)

2. டிம் சவுதி (NZ)

3. மார்க் பாவ்லோவிக் (SER)

4. வசீம் அப்பாஸ் (MALTA)

5. பேட் கம்மின்ஸ் (AUS)

ஆண்கள் T20 உலகக் கோப்பைகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்

1. பிரட் லீ (AUS) vs BAN, கேப் டவுன், 2007

2. கர்டிஸ் கேம்பர் (IRE) vs NED, அபுதாபி, 2021

3. வனிந்து ஹசரங்கா (SL) vs SA, ஷார்ஜா, 2021

4. காகிசோ ரபாடா (SA) எதிராக ENG, ஷார்ஜா, 2021

5. கார்த்திக் மெய்யப்பன் (UAE) vs SL, கீலோங், 2022

6. ஜோசுவா லிட்டில் (IRE) vs NZ, அடிலெய்டு, 2022

7. பேட் கம்மின்ஸ் (AUS) vs BAN, ஆன்டிகுவா, 2024

8. பேட் கம்மின்ஸ் (AUS) vs AFG, கிங்ஸ்டவுன், 2024

Tags:    

Similar News