நரேந்திர மோடி மைதானத்தில் டிராவிஸ் ஹெட் : அன்று 137 ரன்கள்... இன்று டக் அவுட்
- குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகி டக் அவுட்டானார்.
நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டி இறுதிப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்று ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.
இந்த நரேந்திர மோடி மைதானத்தில் அன்று 137 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட் இன்று டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.